♪♫
TA-1017
Tamil
ஆ அம்பர உம்பர புகழுந்திரு
Aa ambara umbara
48
views
பல்லவி
சீர் பக்தரே, அமர்ந்து நீர் நல் வீட்டில் இளைப்பாறுவீர்.
1ம் சரணம்
ஆ பாக்கிய தெய்வ பக்தரே; இஜ்ஜீவ யாத்திரை ஒய்ந்ததே; இப்போதபாய புயலும் உம்மைச் சேராது கிஞ்சித்தும்; சீர் பக்தரே, அமர்ந்து நீர் இன்பத் துறையில் தங்குவீர்.
2ம் சரணம்
ஆ பாக்கிய தெய்வ பக்தரே; உம் மேனி மண்ணில் தூங்கவே, மாண்பாய் எழும்புமளவும் விழித்துக் காத்துக்கொண்டிரும்; சீர் பக்தரே, மகிழ்ந்து நீர் நம் ராஜா வருவார் என்பீர்.
3ம் சரணம்
கேளும், தூயோரின் நாதரே, பரிந்து பேசும் மீட்பரே, வாழ் நாள் எல்லாம், நல்லாவியே, சீர் பக்தரோடு நாங்களும் மேலோகில் சேரச் செய்திடும்.
Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.