TA-1022
Tamil

ஆ! கல்வாரி மலை நின்றதோர் சிலுவை

Aa Kalvaari Malai

1
views
1ம் சரணம்

ஆ கர்த்தாவே, தாழ்மையாக திருப் பாதத்தண்டையே தெண்டனிட ஆவலாக வந்தேன், நல்ல இயேசுவே; உம்மைத் தேடி தரிசிக்கவே வந்தேன்.

2ம் சரணம்

வல்ல கர்த்தாவினுடைய தூய ஆட்டுக்குட்டியே, நீரே என்றும் என்னுடைய ஞான மணவாளனே; உம்மைத் தேடி தரிசிக்கவே வந்தேன்.

3ம் சரணம்

என் பிரார்த்தனையைக் கேளும், அத்தியந்த பணிவாய்; கெஞ்சும் என்னை ஏற்றுக் கொள்ளும் உம்முடைய பிள்ளையாய்; உம்மைத் தேடி தரிசிக்கவே வந்தேன்.