TA-1040
Tamil

இந்நாளுக்காய்க் கர்த்தாவுக்கு

Aachitha Baktharkku

40
views
பல்லவி

ஆண்டவரே உம் பாதம் சரணடைந்தேன் அடிமை நான் ஐயா ஆயிரம் ஆயிரம் துன்பங்கள் வந்தாலும் அகன்று போக மாட்டேன் - உம்மை விட்டு அகன்று போக மாட்டேன்

1ம் சரணம்

ஒவ்வொரு நாளும் உம் குரல் கேட்டு அதன்படி நடக்கின்றேன் உலகினை மறந்து உம்மையே நோக்கி ஓடி வருகின்றேன்

2ம் சரணம்

வேதத்திலுள்ள அதிசயம் அனைத்தும் நன்கு புரியும்படி தேவனே எனது கண்களையே தினமும் தறந்தருளும்

3ம் சரணம்

வாலிபன் தனது வழிதனையே எதனால் சுத்தம் பண்ணுவான் தேவனே உமது வார்த்தையின்படியே காத்துக் கொள்வதனால்

4ம் சரணம்

நான் நடப்பதற்கு பாதையைக் காட்டும் தீபமே உம் வசனம் செல்லும் வழிக்கு வெளிச்சமும் அதுவே தேவனே உம் வாக்கு

5ம் சரணம்

தேவனே உமக்கு எதிராய் நான் பாவம் செய்யாதபடி உமது வாக்கை என் இருதயத்தில் பதித்து வைத்துள்ளேன்

Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.