TA-1050
Tamil

உன்னத தேவனே உயர்மறை நாதனே

Aalayam Amaithida Aruleentha Deva

19
views
பல்லவி

ஆலயம்போய்த் தொழவா ருமென்ற தொனி ஆனந்தப்பரவசம் அருளுதாத்துமந்தனில் ஆலயந்தொழுவது சாலவும் நன்றென ஆன்றோருரை நெறி சான்ற வர்க்கானதே ஆவலாயதி காலையும் பகல் மாலையுந் திருநாளிலும்பரன் – ஆலயம்

1ம் சரணம்

பரம சன்னதியென்றும் பரிசுத்த தூதர்கள் பணிந்து புகழ்ந்து கீதம் பாடியஞ்சலி செய்யும் முறையோதுந் திருமறை கரமேந்தி தக்ஷணை முழுமனதோடு கொண்டு உளம் இதழ் துதிவிண்டு மோட்ச மாநகர் காட்சியால் இக ாட்சியாம் பரன் மாட்சி காணவே – ஆலயம்

2ம் சரணம்

பூர்வ முதல் தொழும்பாபோந்தா லயந் தொழுதார் புனித சுதனும் நமக்கினு முன்மாதிரி தந்தார் ஆர்வமுளாரவரே ஆராருடனுஞ் சென்றார் ஐயனின் மகிமையே அங்கும் விளங்க நின்றார் ஆதலாலினி யாரிலுங்குறை யோதிடாதென துள்ளமே இனி – ஆலயம்

3ம் சரணம்

தனித்தியா னத்துடன் சமுசார ஜெபம் நன்று சபையாரோ டர்ச்சனை தருதல் மிகவும் நன்று இனிதே சத்தியவேதம் பொருளறவே உணர்ந்து இலகு சுடர்கள் போல உலகுக்கொளியே தந்து எந்தையார்சுதன் சிந்தையில்வளர்ந் தென்றுமன்பதில் ஒன்றவே திரு – ஆலயம்

Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.