♪♫
TA-1051
Tamil
ஆலயம்போய்த் தொழவா ருமென்ற தொனி
Aalayam Poi Thozhava
0
views
பல்லவி
ஆலயம் செல்லுவோம் ஆண்டவரைத் தொழுவோம் ராஜாதி ராஜா அவரே – இயேசு கர்த்தாதி கர்த்தர் அவரே அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா துதி அல்லேலூயா
1ம் சரணம்
ஆலயம் ஒழுங்காய் செல்லுவோம் ஆண்டவர் இயேசுவைத் தொழுவோம் ஆர்ப்பரித்து மகிழ்ந்தே பாடுவோம் ஆனந்த துதியோடு போற்றுவோம் – அல்லேலூயா
2ம் சரணம்
பாவங்களை மன்னிப்பவர் அவரே பொல்லா சாபங்கள் நீக்குபவர் அவரே துன்பங்களைப் போக்குபவர் அவரே விடுதலைத் தருபவர் அவரே – அல்லேலூயா
3ம் சரணம்
உற்சாகமாய் காணிக்கைப் படைத்து உள்ளத்தையே அவருக்குக் கொடுத்து உண்மையாய் ஆராதனைச் செய்து உன்னத ஆசீர்வாதம் பெறுவோம் – அல்லேலூயா