ஆனந்த முண்டெனக்கானந்தமுண்டு – என்
Aanantham Undanenukku Undu
ஆனந்தமே இது ஆனந்தமே – தோழர் ஆனந்த நாட்டிற்கு ஏகினாரே; நம்மைப் பிரிந்தது நஷ்டமென்றாயினும் அன்னவர் லாபம் அளவற்றதே
லோகப் பிரயாசம் நீங்கினது – அவர் ஆத்ம கிலேசங்கள் மாறினது, மேலோக ஏதேனில் வாழ்ந்திடச் சென்றிட்ட ஆவியை நாமும் பின் சென்றிடுவோம்
சென்றடைந்தார் அவர் ஆக்கியோன் சந்நிதி, ஆகாய வாகனம் ஏறிச் சென்றார்; தோழரை விட்டுப் பிரிந்து சென்றார் – அவர் காற்றும் புயலுங் கடந்து சென்றார்
இளைப்பாறுதல் தேசம் தீவிரமாய்ச் சேர்ந்தார், தொல்லைகள் சூழ்ந்த இந்நாட்டை விட்டு; நம்பிக்கையும் சமாதானமும் அங்குண்டு, துக்கமும் பாவமும் அங்கேயில்லை
இரட்சகரோடிங்கு சஞ்சரித்தவர்கள், எல்லாவரும் அங்கு கூடிடுவர்; மாறி மாறி அவர் வாழ்த்துதல் கூறிப்பின் ஆர்ப்பரிப்போ டவர் ஆனந்திப்பார்
கஷ்டத்தின் மேலும் மரணத்தின் மேலும் – பேர் வெற்றி பெற்ற பெருங் கூட்டரவர்; லோக ஆசை முற்றும் தீர்ந்து அவர் அங்கு நித்திய காலம் சுகித் திருப்பார்