ஆனந்தமே! ஜெயா! ஜெயா!
Aanathamae jaya jaya
ஆனந்தமாக அன்பரைப் பாடுவேன் ஆசையவர் என் ஆத்துமாவிற்கே ; ஆனந்தமான ஆசிகள் அருளும் ஆண்டவர் இயேசுபோல் ஆரும் இல்லையே இயேசு அல்லால், இயேசு அல்லால், இன்பம் இகத்தில் வேறு எங்கும் இல்லையே இயேசு அல்லால், இயேசு அல்லால் இன்பம் வேறெங்கும் இல்லையே.
தந்தை தாயினும் உன் சொந்தம் ஆனோர்களும் தள்ளிடினும் நான் தள்ளிடுவோனோ? தாங்கிடுவேன் என் நீதியில் கரத்தால் தாபரமும் நல்ல நாதனும் என்றார்
கிறிஸ்து இயேசு பிரசன்னமாகவே கிருபையும் வெளியாகினதே ; நீக்கியே சாவினை நற்சுவிசேஷத்தால் ஜீவன் அழியாமை வெளியாக்கினார்
மகிமையின் நம்பிக்கை சந்தோஷமும் மகிழ்ச்சியின் கிரீடமாகவே, அப்போஸ்தலர் தம் ஊழியத்தாலே ஆதி விசுவாசத்தில் வளர்ந்திடுவோம்
அழுகையின் தாழ்வில் நடப்பவரை ஆழிபோல் வான் மழை நிற்குமே சேர்ந்திடச் சீயோனில் தேவனின் சந்நிதி ஜெயத்தின் மேல் ஜெயம் அடைந்திடுவோம்
Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.