♪♫
TA-1067
Tamil
ஆண்டவா! மேலோகில் உம்
Aandava Mealogil Um
20
views
பல்லவி
ஆண்டவா மோட்சகதி நாயனே மீண்டவா பாவிக் கிரங்கையனே
1ம் சரணம்
நீண்ட ஆயுளுள்ளவா நெறிமறை கொடுத்தவா தாண்டி உலகில் வந்தாயே தயாளமுள்ள யேசுவே
2ம் சரணம்
பெத்தலேக மூரிலே பிள்ளையாய்ப் பிறந்தாயே சித்தம் வைத்திரங்கமாட்டாயோ தேவசீல மைந்தனே
3ம் சரணம்
பாவியான மனுஷி உன் பாதமுத்தி செய்திட ஜீவவாக்குரைக்கவில்லையோ தேற்றல் செய்யும் மீட்பரே
4ம் சரணம்
பேதலித்த சீமோனைப் பேணி முகம் பார்த்தாயே ஆதரவுநீ தான் அல்லவோ அருமையுள்ள அப்பனே
5ம் சரணம்
கொல்கதா மலையிலே குருசினில் தொங்கையிலே பொல்லாருக்கிரங்கவில்லையோ பொறுமையுள்ள தேவனே
6ம் சரணம்
பாவவினை தீர்க்கவே பாடு மிகப் பட்டாயே கோபமின்றி என்னை நோக்காயோ குருசில் அறையுண்டவா
Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.