ஆண்டவர் எனக்காய்
Aandavar Enakkaai
ஆண்டவர் பங்காக தசம பாகம் அன்பர்களே ,தாரும்; -அதால் வரும் இன்பந்தனைப் பாரும் . வான்பல கனிகளைத் திறந்தாசீர் வாதங்கள் இடங்கொள்ளாமற் போகுமட்டும் நான் தருவேன் ,பரிசோதியுங்களென்று ராஜாதிராஜ சம்பூரணர் சொல்வதால்- ஆண்
வேதாளராஜன் அருஞ்சிறை மீட்டாளும் விண்ணவர் கோமானே -அந்த மேதகத்தை நன்றி ஞாபகம் செய்திட விதித்தது தானே . வேதனம் ,வியாபாரம் ,காலி , பறவையில் , வேளாண்மை , கைத்தொழில் ,வேறுவழிகளில் , ஊதியமாகும் எதிலும் அவர் பாகம் உத்தமமாக பிரதிஷ்டை பண்ணியே .-ஆண்
ஆலயங் கட்ட, அருச்சனை செய்ய அருட்பணி பேண, -தேவ ஊழியரைத் தாங்கி உன்னத போதனை ஓதும் நன்மை காண , ஏழைகள் ,கைம்பெண்கள் ,அனாதப்பாலர்கள் எதுகரமற்ற ஊனர், பிணியாளர், சாலவறிவு நாகரீக மற்றவர் தக்க துணைபெற்றுத் துக்கமகன்றிட .-ஆண்
நம்மைப் படைத்துச் சுகம் பெலன் செல்வங்கள் யாவும் நமக்கீந்து ,-நல்ல இம்மானுவே லென்றொரு மகனைத் தந்து இவ்வாறன்பு கூர்ந்து , நன்மை புரிந்த பிதாவைக் கணம் பண்ண நம்மையும் நம்முட யாவைய மீந்தாலும் சம்மதமே அதிலும் தசம பாகம் தாவென்று கேட்கிறார் ; மாவிந்தையல்லவோ? -ஆண்