ஆண்டவர் பங்காக தசம பாகம்
Aandavar Pankaha Dasama Paakam
ஆண்டவர் (கர்த்தாவே) புயல் வீசிடுதே அலைகளும் பொங்குதே! கார் மேகத்தால் வானம் இருண்டதே! புகலிடம் இல்லையே! மாள்கிறோம் கவலையின்றி, உறங்கலாமோ நீர்? ஒவ்வோர் கணமும் திகில் சூழ்ந்திடுதே ஆழ்கடலில் ஆழ்வோமே ! காற்றும் அலையும் என் சித்தம் போல் அமருமே அமைதியாய், புயல் கொந்தளிக்கும் கடல் தானோ, பேயோ மானிடனோ மற்றெதுவோ, வான்புவி ஆழிகளின் ஆண்டவர், உறங்கிடும் ஓடத்தையே! விழுங்கலாகாது கீழ்ப்படிந்தே அமருமே அமைதியாய் அருமையாய் அவை கீழ்படியும் அமர் அமைதியாய் !
ஆண்டவா ! ஆவி கலங்கி தவிக்கிறேன் இன்றே துயர் உள்ளத்தின் ஆழம் குமுறுதே! எழுந்து காருமே ! பாவப்பெருக்கும் தத்தளிப்பும் புரளுதென் ஆன்மாவில், அமிழ்ந்தேன் (2) அன்பின் நாதா ! விரைந்தென்னை ஆட்கொள்ளுமே
கர்த்தாவே, திகில் ஓய்ந்ததே இயற்கை அமர்ந்ததே ஆதவன் ஒளி அக்கடலில் விண்ணொளி என் உள்ளத்தில் மீட்பரே என்னோடு தங்கும் விலகாதீர் என்றும் ஆனந்தமாய் அக்கரை சேர்வேன் இளைப்பாறி சுகிப்பேன்.
Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.