♪♫
TA-1081
Tamil
ஆர் இவர் ஆரோ ஆர் இவர் ஆரோ
Aar ivar aararo
0
views
பல்லவி
ஆர் இவர் ஆராரோ இந்த அவனியோர் மாதிடமே ஆனடை குடிலிடை மோனமாய் உதித்த இவ்வற்புத பாலகனார் ?
1ம் சரணம்
பாருருவாகுமுன்னே இருந்த பரப் பொருள் தனிவரோ? சீருடன் புவி, வான், அவை பொருள் யாவையுஞ் சிருட்டித்த மாவலரோ ?
2ம் சரணம்
மேசியா இவர்தானோ ? நம்மை மேய்த்திடும் நரர்கோனோ? ஆசையாய் மனிதருக்காய் மரித்திடும் அதி அன்புள்ள மனசானோ?
3ம் சரணம்
தித்திக்குந் தீங்கனியோ ? நமது தேவனின் கண்மணியோ ? மெத்தவே உலகிறுள் நீக்கிடும் அதிசயமேவிய விண் ணொளியோ ?
4ம் சரணம்
பட்டத்துத் துரைமகனோ ? நம்மைப் பண்புடன் ஆள்பவனோ? கட்டளை மீறிடும் யாவர்க்கும் மன்னிப்புக் காட்டிடுந் தாயகனோ?
5ம் சரணம்
ஜீவனின் அப்பமோதான் ? தாகம் தீர்த்திடும்பானமோதான் ? ஆவலாய் ஏழைகள் அடைந்திடும் அடைக்கல மானவர் இவர்தானோ ?