TA-1088
Tamil

ஆராதிப்பேன் ஆராதிப்பேன் ஆராதிப்பேன்

Aaraathippaen

16
views
பல்லவி

ஆராதிப்பேன் நான் ஆத்ம மணாளன் என் ஆண்டவர் இயேசுவை அனுதினமே ஆனந்த கீதத்தால் அவர் நாமம் போற்றியே அனுதினம் ஸ்தோத்திரிப்பேன் என் இயேசுவை – 2

1ம் சரணம்

தூதர்சேனை போற்றும் தூயாதி தூயனை துதிகளின் மத்தியிலே வாசம் செய்யும் நேசனை ஜெபமதை ஜெயமாக்கும் தேவாதி தேவனை தினம் தினம் ஸ்தோத்திரிப்பேன் என் இயேசுவை

2ம் சரணம்

அல்லேலூயா என்று ஆவியில் நிறைந்து அன்னிய பாஷையிலே அவரோடே பேசி நன்மையால் என் வாழ்வை நாள்தோறும் நடத்தும் – 2 நாதனை ஸ்தோத்திரிப்பேன் என் இயேசுவை

Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.