TA-1096
Tamil

துதித்திடுவோமே உம்மை உயர்த்திடுவோமே

Aarathanai Engal Aayuthamaamae

16
views
பல்லவி

ஆராதனை இந்த வேளை ஆண்டவரை தொழும் காலை துதியுடனே ஸ்தோத்திரிப்போம் தூயவரை தொழுதிடுவோம்

1ம் சரணம்

ஆவியுடன் நல் உண்மையுடன் ஆராதிப்போம் அவர் நாமத்தையே கூடிடுவோம் பணிந்திடுவோம் கல்வாரி அன்பினை பாடிடுவோம்

2ம் சரணம்

திரு இரத்தத்தால் மீட்பர் சம்பாதித்த திருச்சபையில் தினம் கூடிடவே தவறாமல் வேதம் ருசி பார்த்திட திருப்பாதம் சேர்ந்து ஜெபித்திடுவோம்

3ம் சரணம்

மெய் சமாதானம் கிருபையுடன் மாறாத மீட்பர் மகிமையுடன் மாசற்ற பேரின்ப அன்பினிலே மறுரூபம் அடைந்தே பறந்திடுவோம்

Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.