TA-1102
Tamil

ஆராதனை வேளையிலே தேவன்

Aarathanai Velayilae

0
views
பல்லவி

ஆராதனை எங்கள் தேவனுக்கே ஆராதனை எங்கள் இயேசுவுக்கே ஓசன்னா ஓசன்னா – 4

1ம் சரணம்

மகனாக மகளாக தெரிந்தெடுத்த நல்மீட்பரை நாம் ஆராதிப்போம் – 2 பாசமிகு நேசரை நாம் ஆராதிப்போம் ஆபத்துக்காலத்தில் உதவிடுவார்

2ம் சரணம்

பரிசுத்தர் பரிசுத்தர் எந்நாளுமே ஓயாமல் துதித்து நாம் ஆராதிப்போம் – 2 இரண்டாம் வருகையில் சேர்த்துக்கொள்ள ஆயத்தமாவோம் இந்நேரமே

3ம் சரணம்

ஸ்தோத்திர துதி கன மகிமை யாவும் ஒப்புவிப்போம் நம் தேவனுக்கே – 2 பெலனும் வல்லமையும் நிறைந்தவரை போற்றியே என்றும் ஆராதிப்போம்