ஆரும் துணை இல்லையே
Aarum Thunai Illayae
ஆறுதல் அடை மனமே ஆறுதல் அடை, மனமே;-கிறிஸ்துவுக்குள் ஆறுதல் அடை, மனமே. பாருள் பாவத்தால் வந்த பலனாம் மரண மதின் கூரை அழித்த யேசு கொற்றவன் றனை நோக்கி. – ஆறு
நம்பிக்கை யற்றோரைப் போலே,-மரித்தோர்க்காக நலிவதேன் ஒருக்காலே; உம்பர் கோன் மேகத்தின் மேலே-தோன்றிடும் போ துயிர்த்தெழும்புவ தாலே, வெம்பிப் புலம்பி அழ வேண்டாம்; கிறிஸ்து வெனும் தம்பிரான் திருமொழிச் சாரத்தை ருசிபார்த்து. – ஆறு
ஜீவ நதிகள் ஓடுமே;-எருசலேமில் திரளாய் ஜனங்கள் கூடுமே; தேவ துதியைப் பாடுமே;-யேசுகிறிஸ்தின் ஜெயத்தைச் சொல்லிக் கொண்டாடுமே; ஆவலுடனே நாமும் அதையே அடைவதற்கு ஜீவ வசனந் தன்னைத் திடனாய்ப் பிடிப்போமாக. – ஆறு
எண்ணம் கவலைகள் உண்டாம்;-மரித்தோர்க்காக ஏக்கம் பெருமூச்சும் உண்டாம்; கண்ணீர் சொரிவதும் உண்டாம்;-துயரம் மிஞ்சிக் கலங்கி அழுவதும் உண்டாம்; அண்ணல் கிறிஸ்துவும் முன் எண்ணிக் கண்ணீர் விட்டார், நண்ணி அவரை ஜெபம் பண்ணித் துயரைவிட்டு. – ஆறு
யேசுவைப் பற்றின பேர்கள்-மரித்தும் உயிர்த் தெழுந்து புறப்படுவார்கள்; மாசற்ற தேவன் அவர்கள்-உடனிருக்க மகிமை பெற்றிருப்பார்கள்; பேச வேண்டுமோ? யேசு ராசன் சமுகமதில் நேசமுடன் என்றைக்கும் வாசம் செய்வார்கள் அல்லோ? – ஆறு