ஆறுதலின் மகனாம்
Aaruthalin Maganaam
ஆசையாய் பின் தொடருகிறேன் -உம்மை ஆசையாய் பின் தொடருகிறேன இயேசய்யா…இயேசய்யா ஆசையாய் பின் தொடருகிறேன் (2)
பாலைவனம் போன்றதொரு வாழக்கையிலும் காலைதோறும் உமை நாடி பின் தொடருகிறேன்(2) தோல்விகளே எனை வந்து சூழ்ந்தபோதிலும்-2 கேள்விகளே கேட்காமல் பின் தொடருகிறேன்-2
என் சிலுவை பாரமாக இருந்தாலும் முன் செல்லும் உமைநாடி பின் தொடருகிறேன்(2) இந்நாளின் பாடுகள் கசந்தபோதிலும் -2 அந்நாளின் மகிமை நோக்கி பின் தொடருகிறேன்-2
இடுக்கமான வாசலிலே நுழைந்திடுவேன் நெருக்கமான பாதையிலே பின் தொடருகிறேன்(2) கலப்பையிலே கைவைத்தேன் திரும்பிடமாட்டேன்-2 வருகையிலே சர்ந்திடவே பின் தொடருகிறேன்-2
நீர் வருகின்ற நாள் மிகவும் நெருங்குவதால் மறுரூபமாகிடவே பின் தொடருகிறேன் (2) சாத்தானின் ஆளுகைகள் வீழ்ந்து அழிந்திட-2 யோர்தான்கள் கடந்து உம்மைப் பின்தொடருகிறேன்-2 (வாழ்வின்)
Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.