ஆறுதலின் தெய்வம
Aaruthalin Theyvamae
ஆறுதலின் தெய்வமே உம்முடைய திருச்சமூகம் எவ்வளவு இன்பமானது
ஆத்துமா தேவனே உம்மையே நோக்கி ஆர்வமுடன் கதறுகின்றது உள்ளமும் உடலும் ஒவ்வொரு நாளும் கெம்பீரித்து சத்தமிடுது
உம்முடைய சந்நிதியில் தங்கியிருப்போர் உண்மையிலே பாக்கியவான்கள் தூய மனதுடன் துதிப்பார்கள் துதித்துக் கொண்டிருப்பார்கள்
உம்மிலே பெலன் கொள்ளும் மனிதர்களெல்லாம் உண்மையிலே பாக்கியவான்கள் ஓடினாலும் களைப்படையார் நடந்தாலும் சோர்வடையார்
கண்ணீரின் பாதையில் நடக்கும்போதெல்லாம் களிப்பான நீருற்றாய் மாற்றிக்கொள்வார்கள் வல்லமை மேலே வல்லமை கொண்டு சீயோனைக் காண்பார்கள்
வேறிடத்தில் ஆயிரம் நாள் வாழ்வதைவிட உம்மிடத்தில் ஒரு நாள் மேலானது ஒவ்வொரு நாளும் உமது இல்லத்தின் வாசலில் காத்திருப்பேன்
Kalippaana Neeruttaாy Maattikkolvaarkal
Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.