TA-1122
Tamil

நீதியாம் ஜோதி அநாதி தேவனே

Aathi Mei Devane

16
views
பல்லவி

அதி சுந்தர ரூப குமாரன் இயேசு துதி ஸ்தோத்திரம் செய்திட பிறந்தனரே வேத வாக்கியங்கள் நிறைவேறிடவே தேவன் தயவாய் சுதனை ஈந்தனரே

1ம் சரணம்

கன்னி மரிமடியில் சிசு பாலனாக யூத ராஜாவாக இயேசு உதித்தனரே(2) நடு ராவினிலே கடுங்குளிர்தனிலே (2) படும் நிந்தையை தான் உந்தன்செந்தமன்றோ

2ம் சரணம்

தேவ சேனை வானில் தோன்றிவாழ்த்தினாரே ஆயர் விரைந்து சென்றுதாழ் பணிந்தனரே (2) ராயர் மூவருமேகாணிக்கை படைத்து (2) தேவ பாலனை வாழ்த்தியே போற்றினாரே

3ம் சரணம்

விசுவாசம் என்னும் கேடயம் பிடித்து சாத்தான் சோதனை யாவையும் ஜெயித்திடுவோம் (2) அவர் பிறப்பின் மூலம்காட்டிய தாழ்மையை (2) நாமும் பின்பற்றி வாழ்ந்து சுகித்திடுவோம்

Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.