TA-1123
Tamil

ஆதியிலே வார்த்தை நீரே

Aathiyilae Vaarthai Neerae

15
views
பல்லவி

ஆதியும் அந்தமும் அல்பாவும் ஒமேகாவும் இயேசுவே அவர் அற்புத தேவகுமாரன் நம் இரட்சகர் ஜீவிக்கிறார் ஓசன்னா (7)

1ம் சரணம்

பயப்படாதிருப்போம் அன்பில் நிறைந்திருப்போம் பூரண தேவன்போ நம் பயத்தை புறம்பாக்கும்

2ம் சரணம்

உலகத்தில் உங்களுக்கு உபத்ரவம் உண்டென்றார் உலகத்தை நான் ஜெயித்தேன் என்றும் திடன் கொள்ளுங்கள் என்றார்

3ம் சரணம்

சத்துருவைத் தம் கீழ் பாதபடியாக்கி ஜெய சிங்காசனத்தில் இயேசு வீற்றிருக்கின்றாரே

4ம் சரணம்

புறப்படுவோம் நாமும் கட்டளை கைக்கொண்டே பூமியின் கடைசிவரை சுவிசேஷம் கூறிடுவோம்

5ம் சரணம்

இதோ! இவ்வுலகத்தின் முடிவு பரியந்தம் சகல நாட்களிலும் இயேசு நம்மோடிருக்கின்றார்

6ம் சரணம்

நீதிபரர் நம்மை சீயோனில் சேர்த்திடுவார் நீடுழி வாழ்ந்திடுவோம் அவரோடு ஆண்டிடுவோம்

Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.