TA-1126
Tamil

Aaththuma Aathaayam Seypavarkal

Aaththuma Aathaayam Seypavarkal

0
views
பல்லவி

ஆத்துமா கர்த்தரைத் துதிக்கின்றதே , என்றன் ஆவியும் அவரில் களிக்கின்றதே – இதோ! நேர்த்தியாய்ப் பாடுவேன் , நிதங்கனிந்தே எந்தன் பார்த்திப னுட பதந் தினம் பணிந்தே – இதோ! — ஆத்துமா

1ம் சரணம்

அடிமையின் தாழ்மையைப் பார்த்தாரே – என்னை அனைவரும் பாக்கிய ளென்பாரே , முடிவில்லா மகிமை செய்தாரே , பல முடியவர் பரிசுத்தர் என்பாரே – இதோ! — ஆத்துமா

2ம் சரணம்

பயப்படும் பத்தருக் கிரங்குகிறார் – நரர் பார்த்திட பெருஞ்செயல் புரிகின்றார் ; உயர்த்திடு நரர்களைச் சிதறடிப்பார் – தன்னை உகந்தவர் தாழ்ந்திடில் உயர்த்துகின்றார் – இதோ! — ஆத்துமா

3ம் சரணம்

முற்பிதாக் களுக்கவர் சொன்னதுபோல் – அந்த முனியாபி ராமுட ஜனமதன்பால் , நட்புடன் நினைவொடு நல்லிசரேல் – அவன் நலம் பெற ஆதரித் தார்மறவேல் – இதோ! — ஆத்துமா