TA-1306
Tamil

தேவனின் ஆலயமே பரிசுத்த ஆலயமே

Devanin aalayamae

0
views
பல்லவி

தேவனின் சத்தம் நித்தம் நீ கீழ்படிந்தால் மோட்ச வாழ்வு நிச்சயமே அவரின் சித்தம் செய்ய உன்னை அற்பணித்தால் வாழ்வில் மேன்மை நிச்சயமே – 2 ஆ ஹாஹா ஆமென் அல்லே அல்லேலூயா அல்லேலூயா பாடிடுவோம் அவரை துதித்து பாடும் பாடல் ஒன்றே பாடுகளை மாற்றிடுமே – 2

1ம் சரணம்

எல்ரோயை பாடு அவரே உன்னை காண்பார் வறட்சி எல்லாம் மாற்றிடுவார் – 2 நீ கதறும் குறல் கேட்டு உன்னை துறவின் நேராய் நடத்தி தாகம் எல்லாம் தீர்த்திடுவார் – 2

2ம் சரணம்

எபிநேசரே பாடு உதவி செய்வார் அவரே ஏக்கம் எல்லாம் தீர்த்திடுவார் – 2 உந்தன் முன்னே சென்று தடைகள் எல்லாம் தகர்த்து நேர்த்தியாக நடத்திடுவார் – 2

3ம் சரணம்

யகோவா யீரே எல்லாம் பார்த்துக்கொள்வார் அவர் இல்லையென்று சொல்வது இல்லை – 2 கவலை கண்ணீர் மறந்து கர்த்தரை நீ பாரு கடைசி வரை நடத்திடுவார் – 2

4ம் சரணம்

யகோவா ரப்பா சுகம் தரும் தேவன் வியாதி எல்லாம் விளக்கிடுவார் – 2 தழும்புகளாலும் திரு இரத்தத்தாலும் லோகம் எல்லாம் நீக்கிடுவார் – 2

5ம் சரணம்

யாக்கோபை போல நீயும் கலைத்து நிற்கும் ஸ்தலத்தை பெத்தேலாக மாற்றிடுவார் – 2 நீ கலக்கத்தோடே படுத்தால் உறக்கத்திலும் அவரே தரிசனங்களை தந்திடுவார் – 2