TA-1128
Tamil

ஆத்துமாவே ஸ்தோத்தரி முழு உள்ளமே ஸ்தோத்தரி

Aaththumaavae Sthoeththari

0
views
பல்லவி

ஆத்தும நேசர் உன்னை அழைக்கின்றார் அவர் பாதம் அண்டிட இன்றே வந்திடாயோ பொல்லாத மாய உலகமழியுதே வல்லவர் இயேசு அழைக்கிறார் இயேசுவின் நாமம் வல்லமையுள்ளதே இயேசுவின் நாமம் ஜெயமளிக்குமே இயேசுவின் நாமம் சாவினை நீக்குமே இயேசுவின் நாமம் ஒளஷதமே

1ம் சரணம்

இரட்சண்ய பாதை தன் உதிரத்தினால் இரக்கமுன் மீதிலே கொண்டதால் வகுத்தார் இன்னமும் இந்த மாபெரும் இரட்ஷையே இத்தருணம் நீ தள்ளிடாதே-இயேசுவின்

2ம் சரணம்

மாயவலையில் சிக்குண்டு வீணிலே அயர்ந்திடா அலைபோல் மயங்கி திரியும் யாருமில்லாத உனையும் அணைத்திட தாயுள்ளம் கொண்டோர் நிற்கிறாரே

3ம் சரணம்

தேவனின் இராஜ்ஜியம் காணவே இயலா ஜலத்தினால் திரும்ப நீ பிறவாயாகில் ஆவியினாலும் பிறந்திடுவதினால் ஆகுமே அதினுள் சென்றிடவே

4ம் சரணம்

நித்திரைவிட்டு எழும்பும் வேளையே நினையாத நேரத்தில் வருவார் இயேசுவே அவரை எந்த வேளையும் சந்திக்க ஆயத்தமாகவே ஜீவிப்பாயே