TA-1446
Tamil

எந்த சூழ்நிலையிலும்

Entha sulnilaiyilum

0
views
பல்லவி

எந்த சூழ்நிலை ஆனாலும் நான் நம்புவேன் என் இயேசுவை – 2 கடும் காற்று அடித்திட்டாலும் காரிருள் சூழ்ந்திட்டாலும் – 2 கலங்காமல் திகையாமல் காலமெல்லாம் ஆராதிப்பேன் – 2 ஆராதிப்பேன் உம்மை ஆராதிப்பேன் – 2

1ம் சரணம்

மனுஷர் தலை மேல் ஏறினாலும் நம்புவேன் என் மீட்பரை அக்கினி அனல் என்னை தாக்கினாலும் எரியாமல் ஆராதிப்பேன் – 2 இதுவரை காத்தீர் என்னோடு இருந்தீர் உம்மையே உம்மையே ஆராதிப்பேன் – 2 ஆராதிப்பேன் உம்மை ஆராதிப்பேன் – 2

2ம் சரணம்

நேசித்த நேசம் கைவிட்டாலும் நம்புவேன் என் நேசரை காயங்களால் என்னை கலைத்திட்டாலும் கன்மலையை நம்புவேன் – 2 இதுவரை காத்தீர் என்னோடு இருந்தீர் உம்மையே உம்மையே ஆராதிப்பேன் – 2 ஆராதிப்பேன் உம்மை ஆராதிப்பேன் – 2 நேசிப்பேன் உம்மை நேசிப்பேன்-நேசரே – 2 சேவிப்பேன் உம்மை சேவிப்பேன்-தகப்பனே – 2