♪♫
TA-1442
Tamil
என்னப்பா செய்யணும் நான்
Ennappa Seiyanum
13
views
பல்லவி
எனது உள்ளம் யாருக்கு தெரியும் – இயேசையா எனது நினைவு யாருக்கு புரியும் என்னை நீர் அறிவீரே உம்மை நான் அறிவேனே என்னை புரிந்து கொண்ட தெய்வம் நீரே – இயேசையா
1ம் சரணம்
அன்னை தந்தை அறியவில்லையே – என் உள்ளம் தன்னை புரிந்து கொள்ள முடியவில்லையே என்னை அறிந்த தெய்வம் நீரையா – என் உள்ளம் புரிந்த அன்னை நீரையா — எனது
2ம் சரணம்
மனிதனோ முகத்தை பார்க்கிறான் நீரோ என் உள்ளமதை அறிந்து பார்க்கிறீர் நொருங்கி போன எனது உள்ளத்தை அரவணைத்து காயம் ஆற்றினீர் — எனது
3ம் சரணம்
ஊரும் உறவும் என்னை வெறுத்தது என் உள்ளம் நொந்து சோகமானது என் உள்ளம் அறிந்து ஓடி வந்தீரே ஆற்றி தேற்றி அணைத்துக் கொண்டீரே
Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.