♪♫
TA-2219
Tamil
ஆத்துமமே என் முழு உள்ளமே
Aathumame En Muzhu Ullame
0
views
பல்லவி
ஆத்துமமே என் முழு உள்ளமே – உன் ஆண்டவரைத் தொழு தேத்து -இந்நாள் வரை அன்பு வைத் தாதரித்த – உன் ஆண்டவரைத் தொழுதேத்து சரணங்கள்
1ம் சரணம்
போற்றிடும் வானோர், பூதலத்துள்ளோர் சாற்றுதற் கரிய தன்மையுள்ள – ஆத்துமமே
2ம் சரணம்
தலை முறை தலை முறை தாங்கும் விநோத உலக முன் தோன்றி ஒழியாத – ஆத்துமமே
3ம் சரணம்
தினம் தினம் உலகில் நீ செய் பலவான வினை பொறுத் தருளும், மேலான – ஆத்துமமே
4ம் சரணம்
வாதை, நோய், துன்பம் மாற்றி, ஆனந்த ஓதரும் தயைசெய் துயிர் தந்த – ஆத்துமமே
5ம் சரணம்
உற்றுனக் கிரங்கி உரிமை பாராட்டும், முற்றும் கிருபையினால் முடி சூட்டும் – ஆத்துமமே
6ம் சரணம்
துதி மிகுந்தேறத் தோத்தரி தினமே, இதயமே, உள்ளமே, என் மனமே – ஆத்துமமே