TA-1151
Tamil

Alaganavar arumaiyanavar

Alaganavar arumaiyanavar

18
views
பல்லவி

அழைக்கிறார் அன்பின் தெய்வம் ஆண்டவர் இயேசு அவரை நீ அண்டிடுவாய்

1ம் சரணம்

சஞ்சலமடைந்த உன் வாழ்விலே வஞ்சிக்கும் லோகத்தை நம்பிடாதே தஞ்சம் தருவார் நம்பி வாராயோ கெஞ்சும் உன் ஜெபம் கேட்டிடுவார்

2ம் சரணம்

மாறாத மெய் சமாதானம் ஈவார் மீட்கும் சர்வ வல்ல கர்த்தரின் மூன்றாணி மீதில் தொங்கிடும் இயேசு மாந்தர்கள் பாவம் தீர்த்திடுவார்

3ம் சரணம்

நாசியில் சுவாசமுள்ள மாந்தனை நம்பினாலோ மனம் தளருவாய் நேற்றும் இன்றென்றும் மாறாத இயேசு நித்தமும் உன்னை கைவிடாரே

4ம் சரணம்

உன் ஜென்ம கரும வினைகளால் உன் வாழ்வு கசந்து தவிக்குமே எதை விதைத்தாய் அதையே அறுப்பாய் பாதை தவறி வாழ்ந்திடாதே

5ம் சரணம்

இயேசுவின் நாமம் அல்லாமல் பூவிலே எந்த பேராலும் மீட்பே இல்லை தேக சுகமும் ஆத்தும மீட்பும் தேடி வாராயோ இயேசுவிடம்

Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.