TA-1152
Tamil

Alavilla Anbu

Alavilla Anbu

12
views
பல்லவி

அழைக்கிறார் அழைக்கிறார் அன்பாய் இன்றே உன்னை கல்லும் கரையும் கல்வாரியண்டை கர்த்தர் அழைக்கிறார்

1ம் சரணம்

கேட்டின் மகன் கெட்டழிந்தான் கெட்ட குமாரனைப் பார் பாவத்தின் சம்பளம் மரணமே பாவத்தில் மாளாதே

2ம் சரணம்

உந்தன் நீதி கந்தையாகும் உன்னில் நன்மை ஒன்றில்லை பாவஞ்செய்தே மகிமையிழந்தாய் பாவியை நேசித்தார்

3ம் சரணம்

பாவங்களை மறைப்பவன் பாரில் வாழ்வை அடையான் சன்மார்க்கன் துன்மார்க்கன் இருவரும் சங்காரம் அடைவார்

4ம் சரணம்

நானே வழி சத்தியமும் நித்திய ஜீவன் என்றார் இயேசுவை நம்பி நீ ஜெபிப்பதால் இரட்சண்யம் அடைவாய்

5ம் சரணம்

காலங்களும் கடந்திடும் வால வயதும் மாறும் தேவனைச் சந்திக்கும் வேளையிதே தேடி நீ வாராயோ

Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.