TA-1154
Tamil

Alleluyaa Alleluyaa

Alleluyaa Alleluyaa

14
views
பல்லவி

எங்கும் கிருபை பெருகுதே தங்கும் தேவ மகிமையே

1ம் சரணம்

அன்பினில் குறைந்தோரெல்லாம் தவித்து புலம்புவார் அன்பில் பரிபூரணரோ பறந்திடுவாரே அவனியிலே யாதுமே இல்லாதோரே அவரிலன்று அகமகிழ்வாரே

2ம் சரணம்

கிறிஸ்துவுக்குள் ஜீவித்து மரித்தவரெல்லாம் மறையருளும் சத்தியத்தில் மாண்ட யாவரும் கறை திரைகள் குறைகளேதும் அற்றோரும் மறைந்திடுவார் இமைப்பொழுதிலே

3ம் சரணம்

அருஞ்சபையோர் ஆண்பிள்ளையாய் விளங்கிடுவாரே அருணோதயம் போல் உதிக்கும் உத்தமியிவள் கருணையதில் பிறந்தவராய் நின்றோரே கிருபையினால் ஆட்சி செய்வாரே

4ம் சரணம்

ஆசையுடன் கண்டவரை முகாமுகமாக ஆலயத்தில் சேவிப்பாரே யுகாயுகமாக அளவில்லா மா மகிமையதின் தேசமே அவர்க்கருளும் சுதந்திரமாமே

Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.