TA-1165
Tamil

சேனையின் கர்த்தரின் தேவ வைராக்கியம்

Anuthina Vaazhkkaiyilae

21
views
1ம் சரணம்

அனுதினம் அவர்பாதம் ஆசையாய் அமர்ந்து அவருக்கு முதல் அன்பை ஆவலாய் அளித்து இயேசுவே வாஞ்சையாய் இன்பமாய் கருதும் உள்ளம் உடையோனே உண்மை சீஷன் சீஷனாய் மாறுவேன் நான் - 2 என்னாலே ஒன்றும் இல்லையே எல்லாம் என் இயேசுவால் கூடுமே

2ம் சரணம்

சுயத்தை வெறுத்த சிலுவையை சுகித்து சுயசித்தம் உடைத்த அவயவம் படைத்து இயேசுவின் சாயலில் அனுதினம் வளரும் இன்பம் பெற்றவனே உண்மை சீஷன்

3ம் சரணம்

ஆவியின் கனியில் அதிகம் நிறைந்து அவருக்கு முதல் அன்பை ஆவலாய் அளித்து ஆவியில் நிறைந்து அன்புக்கிரியை செய்யும் ஆண்டவர் அடிமையே உண்மை சீஷன்

4ம் சரணம்

உடைப்பட்ட அப்பமாய் உலகத்தின் உப்பாக ஜொலிக்கும் ஜோதியின் வெளிச்சமாய் எங்கெங்கு சென்றாலும் இயேசுவை சொல்லிடும் இயேசுவின் சாட்சியே உண்மை சீஷன்

Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.