TA-1166
Tamil

ஆற்றினீரே என்னை தேற்றினீரே - 2

Appa appa um

0
views
பல்லவி

அப்பா அப்பா இயேசப்பா உந்தன் பிள்ளை நானப்பா கவலை எனக்கு இல்லப்பா – 2 காக்கும் தெய்வம் என்றும் நீர்தானப்பா கலங்கிட தேவை இல்லை நான்தானப்பா – 2 – அப்பா

1ம் சரணம்

பிறந்திட்ட நாள் முதல் பாதுகாத்து வந்தீரே கவலை கண்ணீர் எல்லாம் மாற்றிவிட்டீரே – 2 தள்ளாடி நடந்த என்னை தாங்கி கொண்டீரே தகப்பனை போல என்னை தோளில் சுமந்தீரே – 2 – அப்பா

2ம் சரணம்

அப்பத்தையும் மீனையும் கொடுக்கும் நல்ல தகப்பனே பசியும் தாகம் எல்லாம் நீக்கி விட்டீரே – 2 அப்பா பிதாவே என்று அழைத்திடும் உரிமையை எனக்கு தந்தீரே – 2 – அப்பா