TA-1169
Tamil

Arankalai Nirmuulamaakkituvoem

Arankalai Nirmuulamaakkituvoem

14
views
பல்லவி

அரசனைக் காணாமலிருப்போமோ நமது ஆயுளை வீணாகக் கழிப்போமோ பரம்பரை ஞானத்தைப் பழிப்போமோ யூதர் பாடனு பவங்களை ஒழிப்போமோ யூத

1ம் சரணம்

யாக்கோபிலோர் வெள்ளி உதிக்குமென்றே இஸ்ரேல் ராஜ செங்கோலெங்கும் கதிக்குமென்றே ஆக்கமிழந்து மறுவாக்குரைத்த பாலாம் தீர்க்கன் மொழிபொய்யாத பாக்கியமே யூத

2ம் சரணம்

தேசோ மயத்தாரகை தோன்றுது பார் மேற்குத் திசை வழி காட்டிமுன் செல்லுது பார் பூசனைக் காண நன்கொடைகள் கொண்டே அவர் பொன்னடி வணங்குவோம் நடவுமின்றே யூத

3ம் சரணம்

அலங்காரமனை யன்று தோணுது பார் அதன் அழகு மனமுங் கண்ணும் கவர்ந்தது பார் இளவர சங்கிருக்கும் நிச்சயம் பார் நாம் எடுத்த கருமம் சித்தியாகிடும் பார் யூத

4ம் சரணம்

அரமனையில் அவரைக் காணோமே அதை அகன்று தென்மார்க்கமாய்த் திரும்புவமே மறைந்த உடு அதோ பார் திரும்பினதே பெத்லேம் வாசலில் நமைக்கொண்டு சேர்க்குது பார் யூத

5ம் சரணம்

பொன் தூபவர்க்கம் வெள்ளைப் போளமிட்டே ராயர் பொற்கழல் அர்ச்சனை புரிவோமே வன்கண்னன் ஏரோதைப் பாராமல் தேவ வாக்கினால் திரும்பினோம் சோராமல் யூத

Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.