அருளே! பொருளே! ஆரணமே அல்லும்பகலுந்துணைநீயே
Arule porulae
அறுப்போ மிகுதியே ஆட்களும் குறையுதே அறுப்புக்கு எஜமானவர் - தமதாட்கள் அனுப்பிட ஜெபிப்போம்
நித்திய நாசமதின் பாதையில் செல்லுவோர்க்கே சத்தியம் கூறிடவே யாருமில்லையே கர்த்தரின் கருணையை இத்தரையறியா எத்தனையோ ஆத்துமாக்கள் அழிகின்றாரே
அந்தோ பாவங்களாலும் சாபரோகங்களாலும் நொந்தே அனுதினமும் நலிவோருண்டே எந்தையாம் ஏசுவின் மா அன்பும் வல்லமையும் எங்கும் எவர்க்கும் கூறிட எவர் வருவீர்
பின்மாரியின்றி பூவின் நற்பயிர் மடியுதே முன்மாரியின்றி மனம் வாடிடுதே ஆவியின் கனிவுடன் போராடி ஜெபிப்போம் செவியில் பெருமழையின் ஓசை கேட்குதே
ஏதுமே செய்யவொண்ணா இராக்காலம் அடுக்குதே ஏகமாய்ப் பகல் அதின் கிரியை செய்வோம் அப்போஸ்தலரின் உபதேசத்தின் ஒளியில் இப்புவியோர் வந்திடவே விரைந்தழைப்போம்
Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.