TA-1180
Tamil

ஆப்ரகாமின் தேவன் அவர், உன்னை ஆசிர்வதித்து பெருகப் பண்ணுவார்

Athin Athin Kaalathilae

14
views
பல்லவி

அதிசய குமரன் - கிறிஸ்தேசு இரட்சகன் இருள் தனில் அருள் ஒளியாய் தோன்றினார்

1ம் சரணம்

பரம் விட்டு தரணியில் வர நினைந்தவரே நர ரூபம் அணிந்தனரே மருள்வினை மாய்த்திட தளர்வினை நீக்கிட மரணம் தனையே உவந்தார்

2ம் சரணம்

கருணையும் கிருபையும் இரக்கம் தாழ்மையுமே உருவாக அமைந்த இவர் அரூபியாய் இருந்தோர் சொரூபியாய் பிறந்தே அருவி போல் இகத்தில் வந்தார்

3ம் சரணம்

நரிக்குமோர் குழியுண்டே பறவைக்கோர் கூடுண்டே மரி மைந்தர்க் கிடமில்லையே பரிந்து ஏற்றிடவே அமிர்ந்தோரை கரையே தெரிந்தனர் ஓர் குடிலே

4ம் சரணம்

திருமனையாகும் பரிசுத்த சபையதுவே நிறுத்தவே தம் முன்னிலையே சந்தோஷமுடனே சகித்திட சிலுவை வந்தனர் விந்தையிதே

5ம் சரணம்

இவரே எம் நாயகனும் இவரே ஆயனுமே இவரே இம்மானுவேலனே இவரடி பணிந்தே புகழ் முடி சூட்டவே வருவீரே பரிசுத்தரே

Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.