TA-2221
Tamil

அதிசயமான ஒளிமய

Athisayamaana Olimaya

16
views
பல்லவி

அதிசயமான ஒளிமய நாடாம் என் நேசரின் நாடாம் நான் வாஞ்சிக்கும் நாடாம்

1ம் சரணம்

பாவம் இல்லாத நாடு ஒரு சாபமும் காணா நாடு நித்திய மகிழ்ச்சி ஓயாத கீதம் உன்னதத்தில் ஓசன்னா – அல்லேலூயா

2ம் சரணம்

வித விதக் கொள்கையில்லை பலப் பிரிவுள்ள பலகை இல்லை ஒரே ஒரு குடும்பம் ஒரே ஒரு தலைவர் எங்குமே அன்புமயம் – அன்புள்ளோர் செல்லும்

3ம் சரணம்

பிரச்சனை ஏதும் இல்லை வீண் குழப்பங்கள் ஒன்றும் இல்லை மொழி நிறம் ஜாதி பற்று உடையோர் எவருமே அங்கு இல்லை – அன்பே மொழி

4ம் சரணம்

இயேசுவின் இரத்தத்தினால் பாவம் கழுவினால் செல்லலாமே இத்தனைப் பெரிய சிலாக்கியம் இழப்போர் இப்பூமியில் எவரும் வேண்டாம் – இன்றே வாரீர்

5ம் சரணம்

சந்திர சூரியன் இல்லை ஆனால் இருள் ஏதும் காணவில்லை – 2 தேவகுமாரன் ஜோதியில் ஜோதி நித்திய வெளிச்சமவர் – என்றும் பகல்

6ம் சரணம்

பல பல திட்டம் இல்லை ஆளும் சட்டங்கள் ஏதும் இல்லை – 2 காவல்துறையில்லை கண்டிப்பும் இல்லை மனிதனின் ஆட்சியில்லை – பேரானந்தமே

7ம் சரணம்

கடைத்தெரு ஏதும் இல்லை தொழிற்சாலைகள் ஒன்றும் இல்லை – 2 தரித்திரர் செல்வர் சிறியவர் பெரியோர் ஆகிய சிறப்பும் இல்லை – எல்லாம் சமம்

Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.