அதிசயமான தேவனே!
Athisayamana devanae
அதிசயமானவர் இயேசு அவர் நாமத்தை நோக்கியே கூப்பிடுவோம் ஆச்சர்யமே அற்புதமே ஆண்டவர் கிரியைகளே
கடுவெளி களித்து பூத்து குலுங்கும் கண்டு பூரித்திடுவோம் வறண்ட வாழ்க்கையில் வற்றா ஜீவ புறப்படுதே மகிழ்ந்திடுவோம் நாமே
வருடத்தை நன்மையால் முடிசூட்டினாரே வல்லவர் நமதேசுவே பாதை நெய்யாகவே ஆண்டு முழுவதும் பொழிந்திடுமே மகிழ்ந்திடுவோம் நாமே
வருட துவக்கம் முடிவு வரையும் விரும்பி நோக்கிடுவார் கருத்துடன் நம்மைக் கர்த்தர் விசாரிப்பார் கவலை தீரும் மகிழ்ந்திடுவோம் நாமே
சுகம் சமாதானம் துளிர்த்திடும் வாழ்வில் தேகம் ஆரோக்கியமே மன பயமெல்லாம் நீங்கினதே கர்த்தர் மகிமையிலே மகிழ்ந்திடுவோம் நாமே
வேத தொனியாம் கீத சுரங்கள் ஓசை கை தாளமுடன் பூங்குயில் கூட்டமாய் தேவனின் தோட்டத்தில் புகழ்பாடி மகிழ்ந்திடுவோம் நாமே
சீயோனின் பணியை முடித்து சீரேசு சீக்கிரம் வருவாரே புது கிருபையால் நடு வான மீதில் பறந்திடுவோம் மகிழ்ந்திடுவோம் நாமே
Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.