அழைத்தீரே உம் சேவைக்கு
Azhaitheerae Um Sevaiku
அழைத்தீரே இயேசுவே அன்போடே என்னை அழைத்தீரே ஆண்டவர் சேவையிலே மரிப்பேனே ஆயத்தமானேன் தேவே
என் ஜனம் பாவத்தில் வாழ்கிறதே என் உயிர் தந்தேன் மன்னுயிர்க்கு என் துயர தொனியோ இது யார் இங்கு கேட்பாரோ? என் காரியமாகவே யாரை அழைப்பேன் என்றீரே வந்தேன் இதோ ?
என்னதான் தீங்கு நான் இளைத்தேன் என்னை விட்டோடும் என் ஜனமே எத்தனை நன்மைகளோ உனக்காக நான் செய்தேன் அல்லோ என்றே உரைதேன்னை ஏங்கி அழைத்தீர் எப்படி நான் மறப்பேன்
எந்தன் ஜெபத்தை கேட்டிடுமே ஏழை ஜனத்தை மீட்டிடுமே எந்தன் பிதா சித்தமே என் போஜனமும் அதுவே என் பிராணனை கூட நேசித்திடாமல் எண்ணியும் ஒப்படைத்தேன்
ஆதி விசுவாசம் தங்கிடவே ஆண்டவர் அன்பு பொங்கிடவே ஆதி அப்போஸ்தலரே உபதேசம் அளித்தனரே நல் பூரண தியாகப் பாதை நடந்தே நன்றியுடன் உழைப்பேன்
ஆடம்பரங்கள் மேட்டிமைகள் ஆசாபாசங்கள் பெருகிடுதே ஆயிரம் ஆயிரமே நரக வழி போகின்றாரே ஆ! நீரேயல்லாமல் யாருண்டு மீட்க ஆண்டவரே இரங்கும்
பாக்கியமான சேவையிதே பாதம் பணிந்தே செய்திடுவேன் ஆயுள் முடியும் வரை கிறிஸ்தேசு வருகை வரை அன்பு மனத்தாழ்மை உண்மையும் காத்து ஆண்டவரை அடைவேன்
Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.