TA-1193
Tamil

பாலன் ஜெனனமானார் பெத்லகேம் என்னும் ஊரிலே

Balan Jenanamaanaar

0
views
பல்லவி

பலன் கொடுப்பீர் நல்ல பலன் கொடுப்பீர் பண்பட்ட நிலம் போல் பலன் கொடுப்பீர் வழியோரமா? நான் கற்பாறையா? முள் புதரா? நான் நல்ல நிலமா? – ..பலன்

1ம் சரணம்

இறைவனின் வார்த்தை விதையாகும் அறியா உள்ளம் வழியோரம் பறவைகள் விரைந்தே தின்பது போல் பகைவனாம் தீயோன் பறித்திடுவான் – ..பலன்

2ம் சரணம்

மண்ணிலா பாறை நிலமாகும் மனதில் நிறையற்ற மனிதர்களே வேரற்ற வாழ்க்கை வாழ்வதினால் வெயிலில் வார்த்தை கருகி விடும் – ..பலன்

3ம் சரணம்

முட் செடி புதராம் மனுவுள்ளம் முளைத்திடும் ஆசைகள் நெறிந்திடவே இறைவனின் வார்த்தை வளரவில்லை இறுகியே ஆசைகள் கொன்றதினால் – ..பலன்

4ம் சரணம்

இறைவனின் வார்த்தை உணர்ந்திடுவோர் குறையில்லா பண்பட்ட நிலமாகும் அறுபது முப்பது நூறு என்றே அறுவடை எடுப்பார் தம் வாழ்வில் – ..பலன்