TA-1205
Tamil

உன்னை பெலப்படுத்தி உனக்கு சகாயம் செய்வேன்

Bayapadathey Nee Vetkapattu

17
views
பல்லவி

பயப்படாதே, பாரில் இப்போதே திகையாதே, கலங்காதே தெரிந்து கொண்டேன், பேர் சொல்லி அழைத்தேன் அறிந்து கொண்டேன், நீ என்னுடையவன்

1ம் சரணம்

தண்ணீரை நீ கடக்கும் போது உன்னோடு கூட நான் இருப்பேன் ஆறுகளை நீ கடக்கும்போது அவைகள் உன்மேல் புரளுவதில்லை – பயப்படாதே

2ம் சரணம்

அக்கினியில் நீ நடக்கும் போதும் அஞ்ச வேண்டாம், வேகாதிருப்பாய் அக்கினி ஜீவாலை உன்பேரில் பற்றாது விக்கினங்கள் ஏதும் சுற்றாது – பயப்படாதே

3ம் சரணம்

இஸ்ரவேலின் பரிசுத்தர் நானே இரட்சகராம் தேவனும் நானே உன்னை மீட்க நான் வந்தேனே கண்மணி போல் அருமையானவனே – பயப்படாதே

4ம் சரணம்

உன்னை நானே உருவாக்கினேனே அன்னை போலவும் ஆதரிப்பேனே கண்மூடாமலும் காத்திடுவேனே சொன்னதை நிறைவேற்றிடுவேனே – பயப்படாதே

5ம் சரணம்

முந்தினதை நினைக்கவே வேண்டாம் பூர்வமானதைச் சிந்திக்க வேண்டாம் எந்த துன்பத்தில் சோர்ந்திட வேண்டாம் வாக்குகளையும் விட்டிட வேண்டாம் – பயப்படாதே

6ம் சரணம்

ஒன்றுக்கும் நீ கவலைப்படாதே என்றும் ஜெபத்தை தவறவிடாதே கடந்த தோல்வியை எண்ணி விடாதே நடந்திடும் வழிகளையும் விடாதே! – பயப்படாதே

7ம் சரணம்

அல்லேலூயாவுக் கருகனும் நானே! அல்லும் பகலும் ஆதரிப்பேனே அல்லேலூயா பாடிடுவாயே வல்ல கரத்தால் நடத்திடுவேனே! – பயப்படாதே

Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.