♪♫
TA-1210
Tamil
கழுகு போல் பறந்து நீ உன்னதத்தில்
Belamula Nagaramam Yesuvndai
0
views
1ம் சரணம்
பெலமுள்ள நகரமாம் இயேசுவண்டை பயமின்றி ஓடி நீ வந்திடுவாய் சஞ்சலத்திற் கொரு வழியில்லையே சந்ததம் அவர் நம்மைக் - காத்துக்கொள்வார்
2ம் சரணம்
நிலையில்லா உலகத்தின் அலைகளாலே அலைந்திடும் பயனென்ன புதல்வனே நீ விசுவாசக் கப்பலில் ஷேமமாக யாத்திரை செய்பவர்க்கு - லோகம் வேண்டாம்
3ம் சரணம்
கழுகு போல் பறந்து நீ உன்னதத்தில் வாழ்கின்ற ஜீவியம் வாஞ்சித்துக்கொள் காத்திருந்திடுகில் ஈந்திடுவார் பெருக்கமுள்ள பெலன் - மக்களுக்கு
4ம் சரணம்
மரணம் தான் வருகிலும் பயப்படாதே விரைந்துன்னைக் கர்த்தர் தான் காத்திடுவார் யாதொன்றுமுன்னைப் பயப்படுத்த எங்குமில்லை யென்று - விசுவாசிப்பாய்
5ம் சரணம்
ஆறுதலடையு மந்நாடு சென்று இயேசுவின் மார்பில் நானானந்திப்பேன் பரம சுகம் தரும் ஊற்றுகளில் பரனோடு நித்தியம் - பானம் செய்வேன்