TA-1215
Tamil

பெலனில்லா நேரத்தில் பெலனாக வந்தீர்

Belanilla Nearthil Maranadha

15
views
பல்லவி

பெலனில்லா நேரத்தில் புது பெலன் தந்து என்னை நீர் தாங்கிடுமே திடனில்லா நேரத்தில் திடமனம் தந்து என்னை நீர் நடத்திடுமே பெலன் தாருமே பெலன் தாருமே உம் பெலத்தால் என்னை நடத்திடுமே

1ம் சரணம்

எலியாவைப்போல் வனாந்திரத்தில் களைத்து போய் நிற்கின்றேனே மன்னாவை தந்து மறுபடி நடக்க செய்யும்

2ம் சரணம்

மனிதர்களின் நிந்தனையால் மனம் நொந்து நிற்கின்றேனே – மன்னித்து மறக்க உந்தனின் பெலன் தாருமே

3ம் சரணம்

போராட்டங்கள் சூழ்ந்ததாலே சோர்ந்து போய் நிற்கின்றேனே சோராமல் ஓட திடமனம் அளித்திடுமே

4ம் சரணம்

மாம்சம் என்னில் மேற்கொள்வதால் அடிக்கடி தவறுகிறேன் – பரிசுத்த வாழ்வு வாழ பெலன் தாருமே

Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.