♪♫
TA-1216
Tamil
பாவ மாந்தர் நம்பிச் சாரும்
Belaveenarin Belanum
0
views
பல்லவி
பெலத்தினால் அல்ல பராக்கிரமம் அல்ல ஆவியினால் ஆகும் என் தேவனால் எல்லாம் கூடும்- 2 ஆகையால் துதித்திடு ஊக்கமாய் ஜெபித்திடு வசனம் பிடித்திடு பயத்தை விடுத்திடு-2 – பெலத்தினால்
1ம் சரணம்
அவனிடம் இருப்பதெல்லாம் மனிதனின் புயம் அல்லவா நம்மிடத்தில் இருப்பதுவோ நம் தேவனின் பெலனல்லவா-2 – ஆகையால்
2ம் சரணம்
கர்த்தர் செய்ய நினைத்துவிட்டால் அதற்க்கொரு தடையில்லையே மனிதனால் முடியாதது நம் தேவனால் முடிந்திடுமே-2 – ஆகையால்
3ம் சரணம்
இன்று கண்ட எகிப்தியனை என்றும் இனி காண்பதில்லை கர்த்தர் யுத்தம் செய்திடுவார் நீங்கள் ஒன்றும் செய்வதில்லை-2 – ஆகையால்
4ம் சரணம்
அநேகரை கொண்டாகிலும் கொஞ்சம்பேரை கொண்டாகிலும் இரட்சிப்பது தடையுமல்ல நம் தேவனுக்கு தடையுமில்லை-2 – ஆகையால்