Berakkaavil Kooduvom
Berakkaavil Kooduvom
பெத்லகேம் நற்செய்தியே பேரொளி விண் வானிலே உலகில் மிகுந்த சந்தோஷமே பாலகன் ஏசு பிறந்தாரே
முன்னுரை நூற்படி தோன்றினார் முன்னணையில் ஓர் அடையாளம் தேவ குமாரன் இம்மானுவேலன் பாவ மனிதரின் இரட்சகரே
பொன், போளம், தூபமும் காணிக்கை பாலன் சமூகம் செலுத்தினர் இவ்விதம் எம்மை ஜீவ பலியாய் இன்றே தம் பாதம் படைத்திடுவோம்
ஆவியின் ஏவுதல் பெற்றதால் ஆலயம் சென்ற சிமியோனே ஆறுதல் தேடி இரட்சண்யம் நாடி ஆண்டவர் ஏசுவைக் கண்டடைவோம்
ஆலோசனை தரும் கர்த்தரே அற்புத தேவன் ஜெனித்தாரே கலங்கிடாமல் திகைத்திடாமல் கர்த்தர் துணைநம்பி வாழ்ந்திடுவோம்
கடைசி காலம் நெருங்குதே கர்த்தர் திரும்பி வருகின்றார் தேவ எக்காளம் முழங்கும் நேரம் தேவ குமாரனைச் சேர்ந்திடுவோம்
Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.