♪♫
TA-1001
Tamil
புத்தியுள்ள ஸ்திரீ
Buthiyulla Sthree
17
views
பல்லவி
சிரசு முதல் உள்ளங்கால்கள் வரை எல்லாம் என் இயேசுவுக்கே
1ம் சரணம்
உள்ளத்தில் புதுப்பாட்டுப் பாடிடுவேன் இயேசென்னை சந்தித்ததால் என் வாழ்வை அவர் கையில் அர்ப்பணித்தேன் என் வாழ்க்கை இயேசுவுக்கே
2ம் சரணம்
பாவம் என் கண்களை மூடினது இயேசுவின் இரத்தம் கழுவினது இயேசுவை நோக்கியே முன்நடப்பேன் என் கண்கள் இயேசுவுக்கே
3ம் சரணம்
பாவத்தால் கைகள் கறைப்பட்டது இயேசுவின் காயங்கள் சுத்தமாக்கிற்று என்றென்றும் அவர் வேலை செய்திடவே என் கைகள் இயேசுவுக்கே
4ம் சரணம்
ஜீவபாதை விட்டுத் தவறிப் போனேன் இயேசுவே வழி என அறிந்து கொண்டேன் என் கால்கள் அவர் பாதை சென்றிடவே என் கால்கள் இயேசுவுக்கே
Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.