♪♫
TA-1231
Tamil
Change my heart
Change my heart
13
views
பல்லவி
செடியே திராட்சைச் செடியே கொடியாக இணைந்து விட்டேன் உம் மடிதான் என் வாழ்வு உம் மகிழ்ச்சிதான் என் உயர்வு
1ம் சரணம்
கத்தரித்தீரே தயவாய் கனிகள் கொடுக்கும் கிளையாய் சுத்தம் செய்தீரே இரத்தத்தால் சுகந்த வாசனையானேன்
2ம் சரணம்
பிதாவின் மகிமை ஒன்றே பிள்ளை எனது ஏக்கம் மிகுந்த கனிகள் கொடுப்பேன் உகந்த சீடனாவேன்
3ம் சரணம்
ஆயன் சத்தம் கேட்டு உம் அன்பில் நிலைத்து வாழ்வேன் பிரிக்க இயலாதையா பறிக்க முடியாதையா
Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.