TA-1238
Tamil

Chocolate ஜாடியில்

Chocolate Chocolate Jaadiyil

14
views
பல்லவி

கிறிஸ்தேசு உயிர்த்தெழுந்தார் மரித்தோரில் முதற் பலனாகிய பாதாளம் நடுங்கிட வேதாளம் ஒடுங்கிட ஆதவன் ஜெயித்தெழுந்தார்

1ம் சரணம்

மரணமதின் முள்ளினை முறித்தார் தம் மரணத்தால் அறவே அகற்றவே அடிமையின் நுகந்தனை வெற்றி வேந்தர் எழுந்தார்

2ம் சரணம்

எழுந்த இயேசு இராஜனே அழிவை காண்பதில்லையே வீழ்ந்தோரை வழுவாது நிறுத்த தம் முன்னிலையே ஆழ்ந்த அன்பு உடையோர்

3ம் சரணம்

மா பரிசுத்த ஆவியால் - மரித்தோரினின்றெழுந்தார் நேசமுள்ள சரீரம் சபையதின் சிரசாக ஆசித்தே வென்றெழுந்தார்

4ம் சரணம்

யாவையும் தமது திரு - பாதங்கட்கு கீழ்ப்படுத்தும் ஆவியின் செயலாலே அழிவினை அழிப்பவர் சாவை நீக்கும் மருந்தே

5ம் சரணம்

ஜீவனின் அதிபதியாய் சபையின் அரும் சிரசாய் ஜோதியாய் நடந்தவர் அதன் இடைதனிலென்றும் கேதம் போக்க எழுந்தார்

6ம் சரணம்

ஆவியும் மணவாட்டியும் வாரும் கர்த்தாவே எனவே ஆதரைதனில் அவர் வரும் வேளை நெருங்குதே ஆமென் வாரும் என்பீரே

Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.