♪♫
TA-1246
Tamil
தெய்வாவி, மனவாசராய்,
Deivaavi Manavaasaraai
17
views
பல்லவி
தெய்வாலயந்தனில் சேர்வோம்-திரி யேகரின் திருத்தாள் போற்றியே களிகூர்வோம்
1ம் சரணம்
தெய்வநிறையுள்ள யேசு சீர் தெய்வாலயம்-அவர் செற்றலர் இடித்துமே சிறந்தவாலயம் தமின் மெய்ப்பல னளித்து நம்மை மீட்குமாலயம்
2ம் சரணம்
கர்த்தனைப்பிடித்தோன் ஜீவ கற்றெய்வாலயம் -எந்தக் காலமும் துதிமுழங்கும் கான வாலயம் பரி சுத்தமாய்த்தனையே காக்கும் துங்க வாலயம்
3ம் சரணம்
திவ்யபக்தர் கூட்டமே சிங்காரவாலயம் அது தெய்வ ஆவி சிற்பி வேலை செய்யுமாலயம் தீட் டவ்வியம் பகைவிலக்கும் அன்பினாலயம்
4ம் சரணம்
வானமே தேவாட்டுக்குட்டி வாழுமாலயம் பக்தர் மகிமை ஜோதிமய மாகுமாலயம் மெய்ஞ் ஞானபாக்கியங்கள் பெய்யும் நாதராலயம்
Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.