TA-1247
Tamil

தெய்வமே என்னை தேடி வந்தாரு

Deivame Ennai Thedi

17
views
பல்லவி

தெய்வமே இயேசுவே உம்மைத் தேடுகிறேன் தினம்தினம் உம்மையே நோக்கிப் பார்க்கிறேன் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் – 2

1ம் சரணம்

உலகப் பெருமை இன்பமெல்லாம் உமக்காய் இழந்தேனையா உம்மைப் பிரிக்கும் பாவங்களை இனிமேல் வெறுத்தேனையா உம் சித்தம் நிறைவேற்றுவேன் உமக்காய் வாழ்ந்திடுவேன்

2ம் சரணம்

எதை நான் பேசவேண்டுமென்று கற்றுத் தாருமையா எவ்வழி நடக்க வேண்டுமென்று பாதை காட்டுமையா ஒளியான தீபமே வழிகாட்டும் தெய்வமே

3ம் சரணம்

உலகம் வெறுத்து பேசட்டுமே உம்மில் மகிழ்ந்திருப்பேன் காரணமின்றி பகைக்கட்டுமே கர்த்தரைத் துதித்திடுவேன் சிலுவை சுமந்தவரை சிந்தையில் நிறுத்துகிறேன்

Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.