TA-1250
Tamil

தெய்வன்புதான் மா இனிமை

Deivanputhaan Maa Inimai

18
views
பல்லவி

தெய்வீகக் கூடாரமே என் தேவனின் சந்நிதியே தேடி ஓடி வந்தோம் தெவிட்டாத பாக்கியமே மகிமை மகிமை மாட்சிமை மாறா என் நேசருக்கே

1ம் சரணம்

கல்வாரி திருப்பீடமே கறை போக்கும் திரு இரத்தமே உயிருள்ள பரிசுத்த ஜீவ பலியாக ஓப்புக் கொடுத்தோம் ஐயா

2ம் சரணம்

ஈசோப்பினால் கழுவும் இன்றே சுத்தமாவோம் உறைவின்றி பனி போல வெண்மையாவோம் உம் திரு வார்த்தையினால்

3ம் சரணம்

அப்பா உம் சமூகத்தின் அப்பங்கள் நாங்கள் ஐயா எப்போதும் உம் திருப்பாதம் அமர்ந்திட ஏங்கித் தவிக்கின்றோம்

4ம் சரணம்

உலகத்தின் வெளிச்சம் நாங்கள் உமக்காய் சுடர் விடுவோம் ஆனந்த தைலத்தால் அபிஷேகியும் ஐயா அனல் மூட்டி எரிய விடும்

5ம் சரணம்

தூபமாய் நறுமணமாய் துதிகளை செலுத்துகிறோம் எந்நாளும் எப்போதும் எல்லா ஜெபத்தோடும் ஆவியில் ஜெபிக்கின்றோம்

6ம் சரணம்

ஜீவனுள்ள புதிய மார்க்கம் தந்தீர் ஐயா மகா பரிசுத்த கூடாரத்திற்குள்ளே மகிமையில் நுழைந்து விட்டோம்

Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.