தெய்வீகக் கூடாரமே என்
Deiveega Koodaram
தேசமே பயப்படாதே மகிழ்ந்து களிகூரு - (2) பயப்படாதே மகிழ்ந்து களிகூரு கர்த்தர் பெரிய காரியம் செய்திடுவார் (2) தேசமே கேளாய் கர்த்தரின் வார்த்தை துரிதமாய் நிறைவேறுதே நினிவேயைப் போல மனந்திரும்பாயோ இனி காலம் சென்றிடாதே அல்லேலூயா, அல்லேலூயா, அல்லேலூயா, ஆமென். ஆமென் கர்த்தாவே என் இயேசுவே சீக்கிரம் வாருமே
பாவியை மீட்க நரபலியான தேவக் குமாரன் இவர் சாபத்தினின்று லோகத்தை மீட்க சீக்கிரம் வருகிறாரே அல்லேலூயா, அல்லேலூயா, அல்லேலூயா, ஆமென். ஆமென் கர்த்தாவே என் இயேசுவே சீக்கிரம் வாருமே
மாமிசமான யாவரின் மேலும் மாரியே பொழிந்திடுதே ஆவிக்குள்ளாகி அனல் நெருப்பாகி ஆண்டவர் சேவை செய்வோம் அல்லேலூயா, அல்லேலூயா, அல்லேலூயா, ஆமென். ஆமென் கர்த்தாவே என் இயேசுவே சீக்கிரம் வாருமே
உலகமும் அதன் ஆசை இச்சைகள் சகலமும் ஒழிந்திடுமே தேவ சித்தம் நாம் செய்திடுவோமே திடமாய் நிலைத்திருப்போம் அல்லேலூயா, அல்லேலூயா, அல்லேலூயா, ஆமென். ஆமென் கர்த்தாவே என் இயேசுவே சீக்கிரம் வாருமே
இயேசுவின் ராஜ்யம் நித்திய ராஜ்யம் எளியோர்கள் வாழ்ந்திடவே புதுவானம் பூமி படைத்திடுவாரே பரிசுத்தவான்களுக்காய் அல்லேலூயா, அல்லேலூயா, அல்லேலூயா, ஆமென். ஆமென் கர்த்தாவே என் இயேசுவே சீக்கிரம் வாருமே
Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.