♪♫
TA-1255
Tamil
தேவ அன்பிதுவே தூய அன்பிதுவே
Deva Anbidhuvey
0
views
1ம் சரணம்
தேவ அன்பின் பெருக்கைப் பார்! மேல் வீட்டை இயேசு விட்டார்; மா பாடனுபவித்தார் (2) பாதகமுள்ள லோகத்தாரை பாவத்தினின்று மீட்க அற்புதமான நேசந்தான்! அவரன்பு எனக்கு; தேவ குமாரன் எனக்காய் உதிரம் சிந்தினார்
2ம் சரணம்
நிந்தை எனக்காய் சகித்தார் பாவங்கள் எல்லாம் சுமந்தார் மன்னிக்கும்படியாக (2) பாவம் பயம் தேவ கோபம் யாவற்றையும் நீக்க – அற்புத
3ம் சரணம்
பேயின் வலைகள் கிழிந்திட, சாவின் கூர் ஒடிந்திட என் நேசர் மரித்தார் (2) பரிசுத்தமாய் ஜீவிக்க இரட்சிப்பைத் திறந்தார் – அற்புத